states

5.8 சதவிகிதத்தில் இருந்து 8.04 சதவிகிதமானது இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு!

புதுதில்லி, நவ. 4 - இந்தியாவில், செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அக்டோபரில் வேலையின்மை விகிதம் 1.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் 2.6 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள் ளது. இந்தியப் பொருளாதாரக் கண்கா ணிக்கும் மையம் (CMIE) இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.7 சதவிகிதத்தில் இருந்து 7.2 சதவிகிதமாக குறைந்துள்ளது, ஆனால், கிராமப்புற இந்தி யாவில் 5.8 சதவிகிதத்தில் இருந்து 8.04 சத விகிதமாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித் துள்ளது. அக்டோபர் 2021 மற்றும் 2020-இல் கிரா மப்புற வேலையின்மை விகிதம் முறையே 7.7 சதவிகிதம் மற்றும் 7 சதவிகிதமாக இருந்தது. தொற்றுநோய்க்கு முன்பு, 2019 அக் டோபரில் இது 8.1 சதவிகிதமாக இருந்தது. தற்போது 2022 அக்டோபரில் 8.04 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜக ஆளும் ஹரியானாவில் வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக 31.8 சதவிகிதமாக பதி வாகியுள்ளது. அதைத்தொடர்ந்து நீண்டகால மாக பாஜக ஆட்சியில் இருந்த தற்போது காங்கிரஸ் ஆட்சி நடத்தும் ராஜஸ்தான் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 30.7 சதவிகிதமாக உள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் 22.4 சதவிகிதம், ஜார்கண்ட் 16.5 சதவிகிதம், பீகார் 14.5 சதவிகிதம், திரிபுரா 10.5 சதவிகிதம் என அதிகபட்ச வேலையின்மையைக் கொண்டிருக் கின்றன.

;