tamilnadu

img

2021-22 நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் – சென்னை மாநகராட்சி தகவல்!

2021-22 நிதியாண்டில் ரூ. 1,240 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்திருந்தது.  

2021-22 நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.750 கோடிகளாகவும், தொழில்வரி இலக்கு ரூ.447 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும் வார்டு அலுவலகங்களிலும் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணியுடன் சொத்துவரி, தொழில்வரி ஆன்லைன் வழியாக வசூலிக்கப்பட்டது.  

நிதியாண்டில் சொத்துவரி ரூ.778 கோடியாகவும், தொழில்வரி ரூ.462 கோடியாகவும் வசூல் ஆகியுள்ளன. இதில் சொத்துவரி ரூ.22 கோடி அதிகமாகவும், தொழில்வரி ரூ.9 கோடி அதிகமாகவும் வசூலாகியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக சொத்துவரி வசூலானது. மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 35 சதவீதம் கூடுதலாக வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.    

அதனைதொடர்ந்து இன்னும் வசூலிக்க வேண்டிய நிலுவையில் உள்ள வரி மொத்தம் ரூ.230 கோடி என்றும், 2022-23 நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் 6 மாதத்துக்கான வரியை இன்றுமுதல் ஏப்ரல் 15க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தொகை சலுகையாக திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;