tamilnadu

img

ஆய்வின்றி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்?

சென்னை, ஏப்.26- “எந்தவித அறிவியல் பூர்வ மான ஆய்வு நடத்தாமல் செறி வூட்டப்பட்ட அரிசி விநியோக திட்  டத்தை எப்படி அமல்படுத்து கிறீர்கள்?” என ஒன்றிய பாஜக அர சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் முருகன் குடி யைச் சேர்ந்த கனிமொழி மணி மாறன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், “நாடு முழு வதும், மக்களுக்கு செறிவூட்டப் பட்ட அரிசி விநியோகிக்கும் திட்  டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள் ளது.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. நியாய  விலைக் கடைகள், பள்ளி குழந்தை களுக்கு மதிய உணவு திட்டத்தின்  கீழ் இந்த அரிசி வழங்கப்படவுள் ளது. உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறி யிருந்தார். அதேபோல், “தலசீமியா, அமீ னியா நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் மருத்துவர்கள் ஆலோச னைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசி உண்ண வேண்டும்.

இந்த  எச்சரிக்கை வாசகம் செறிவூட்டப் பட்ட அரிசி பையில் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுகிறது” என,  பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்  வன் என்பவரும் வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதி பதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும்  நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத்  அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஏப்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்  தரப்பில் ஆஜரான தலைமை வழக்  கறிஞர் பி.எஸ். ராமன், “அனைத்து நியாய விலைக் கடைகளின் முன்பு, தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி பைகளில் எச்ச ரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை” என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர்கள் சார்  பில் ஆஜரான வழக்கறிஞர் சேவி யர் அருள்ராஜ், “எந்த விதமான அறி வியல்பூர்வமான ஆய்வும் நடத்தா மல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்  கப்படுகிறது. நாடாளுமன்றத்தி லும் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார். இதையடுத்து வழக்கை விசா ரித்த நீதிபதிகள், “இந்தத் திட்டம்  பாராட்டத்தக்கது. இருந்தாலும்,  எந்த அறிவியல்பூர்வமான ஆய் வும்  நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி  விநியோகத் திட்டம் எப்படி அமல்  படுத்தப்படும்?” என்று வினவினர்.  

மேலும், “இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பிய அவர்  கள், ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணை யை ஜூன் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

;