tamilnadu

img

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:
தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டார்.இதுதொடர்பாக தமிழக தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு கேமிராக்கள் ‘ஆப்கோ’ மற்றும் ‘டி.எம்.ஆர்.’ திட்டங்களை அமல்படுத்துவதற்கான ‘டெண்டர்’ செயல் முறைகளில் ரூ.350 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கான ‘டிஜிட்டல் மொபைல் ரேடியோ’ திட்ட டெண்டர் நடைமுறைகளை மீறி ‘வி லிங்க் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. முறைகேடு நடந்து ள்ளன என்பது சரியான தகவல் இல்லை.

2 நகரங்களில் ரூ.86.57 கோடிக்கு ‘ஆப்கோ’ திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம் ‘வி லிங்க் சிஸ்டம்ஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படவில்லை. 10 மாவட்டங்களுக்கான ‘டி.எம்.ஆர்.’ திட்டங்கள் மொத்தம் ரூ.57.49 கோடிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அவற்றில் ரூ.3.49 கோடி மதிப்புள்ள ஒரு மாவட்டத்துக்கான டெண்டர் மட்டுமே இறுதி செய்யப்பட்டு உள்ளது.மீதமுள்ள மாவட்டங்களுக்கான ‘டி.எம்.ஆர்.’ திட்டங் களின் டெண்டர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ‘டி.எம்.ஆர்.’ மற்றும்‘ஆப்கோ’ திட்டங்களில் எந்த ஒப்பந்ததாரருக்கும் இதுவரை தொகை வழங்கப்படவில்லை.தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் அனைத்து தொழில்நுட்பக் கருவிகள், கண்காணிப்பு கேமிரா மற்றும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் 1998-ன் படி பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.காவல்துறையின் தேவை பல்வேறு நிலைகளில் முறையாக ஆராயப்பட்டு, கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகள் தொழில்நுட்பக் குழு மற்றும் டெண்டர் நடைமுறைகளை செய்வதற்கு பொறுப்பான பிற குழுக்களின் உரிய ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படுகின்றன.தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. எனவே இதுதொடர்பாக காவல்துறை டி.ஜி.பி.ஜே.கே.திரிபாதி பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.தற்போது விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;