tamilnadu

img

உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடக்கும் விசாரணை மார்ச் 7 முதல் நிறுத்தம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடக்கும் விசாரணை மார்ச் 7 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்துள்ளார்.  

கொரோனா தொற்று காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும்போது, இணையதள தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.  

எனவே மார்ச் 7 ஆம் தேதிமுதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த இருப்பதாகவும், காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.  

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் விளக்கமளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

;