tamilnadu

ஜூன் 8,9 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு

திருவாரூர், ஜூன் 5-திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, ஜூன் 8 அன்று மைய எண் 8001 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் 400 தேர்வர்களும், மைய எண் 8002 ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் 300 தேர்வர்களும், மைய எண் 8004 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூத்தாநல்லூரில் 396 தேர்வர்களும், மைய எண் 8102 வேலுடையார் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 500 தேர்வர்களும், மைய எண் 8104 கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 400 தேர்வர்களும், மைய எண் 8105 சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 500 தேர்வர்களும், மைய எண் 8106 அரசு மேல்நிலைப்பள்ளி புலிவலத்தில் 260 தேர்வர்களும், மைய எண் 8107 அரசு மேல்நிலைப்பள்ளி அம்மையப்பனில் 271 தேர்வர்களும் என மொத்தம் 3027 தேர்வ ர்கள் முதல் தாள் தேர்வு எழுத உள்ளனர்.மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, ஜூன் 9 அன்று மைய எண் 8001 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் 460 தேர்வர்களும், மைய எண் 8002 ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் 400 தேர்வர்களும்,மைய எண் 8003 தேசிய மேல்நிலைப்பள்ளி, காந்திஜி ரோடு மன்னார்குடியில் 400 தேர்வர்களும்,மைய எண் 8004 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூத்தாநல்லூரில் 445 தேர்வர்களும், மைய எண் 8005 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மன்னார்குடியில் 400 தேர்வர்களும், மைய எண் 8006 தூய தெரசாள் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டியில் 460 தேர்வர்களும், மைய எண் 8101 ஸ்ரீ.ஜி.ஆர்.எம்(பெண்கள்) மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 500 தேர்வர்களும், மைய எண் 8102 வேலுடையார் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 473 தேர்வர்களும்,மைய எண் 8103 வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 460 தேர்வர்களும்,மைய எண் 8104 கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 400 தேர்வர்களும்,மைய எண் 8105 சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருவாரூரில் 400 தேர்வர்களும்,மைய எண் 8106 அரசு மேல்நிலைப்பள்ளி புலிவலத்தில் 300 தேர்வர்களும், மைய எண் 8107 அரசு மேல்நிலைப்பள்ளி அம்மையப்பனில் 300 தேர்வர்களும்,மைய எண் 8108 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வலங்கைமானில் 400 தேர்வர்களும்,மைய எண் 8109 அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நன்னிலத்தில் 400 தேர்வர்களும் என மொத்தம் 6198 தேர்வர்கள் இரண்டாம் தாள் தேர்வு எழுத உள்ளனர் என ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

;