tamilnadu

img

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்  

சென்னை, ஏப். 7 - தகுதி தேர்வில் தேர்ச்சி  பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியை தொடர முடி யாடு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணி  புரியும் ஆசிரியர்கள் கட்டா யம் தகுதி தேர்வில் (டெட்)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பணி யில் உள்ள ஆசிரியர்களும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப் படாது என்று தமிழக அரசு  அறிவித்தது. அதன்படி ஊதிய உயர்வை நிறுத்தி யது. இததை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதிபெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய  உயர்வு பெற உரிமை யில்லை. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

;