tamilnadu

img

அதிகரிக்கும் வைரஸ் தொற்று: இன்று முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்

புதுச்சேரி:
புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.புதுச்சேரி மாநில  பேரிடர் ஆணைய கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜூன் 21) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம் மல்லாடி கிருஷ்ணாராவ் கமலக்கண்ணன் ஷாஜகான் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நாராயணசாமி காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று உயர்ந்து வருகிறது. எனவே, அண்டை மாநில மாவட்டமான கடலூர், விழுப்புரத்தில் கடைகள் பிற்பகல் மட்டுமே செயல்படுகிறது.  அதன்படி புதுச்சேரியில் ஜூன் 23ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்கும்.பால் நிலையங்கள் மாலை 6 மணி வரை செயல்படும். உணவு விடுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. கடற்கரை சாலையில் மக்கள் அதிகமாக கூடுவதால் கடற்கரை சாலை அடுத்த 10 நாட்களுக்கு மூடப்படும். மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

பொதுமக்கள் கட்டாயம்  முகக் கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை? கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசின் சார்பில் வீடு வீடாக நடைபெறவிருந்த சிவப்புநிற ரேஷன்அட்டை கணக்கெடுக்கும் பணி  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

;