tamilnadu

img

வெளிநாடுகளில் இந்தியைப் பரப்ப ரூ.43 கோடி அள்ளி இறைப்பு

புதுதில்லி:
வெளிநாடுகளில் இந்தி மொழியைப் பரப்புவதற்கு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 43 கோடியே 48 லட்சம் அளவிற்கு மோடி அரசு அள்ளி வீசியுள்ளது.இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன் பதிலளித்துள்ளார். அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“ஐக்கிய நாடுகள் அபையின் அலுவல்மொழியாக இந்தியைக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தி மொழியை வெளிநாடுகளில் பரப்பவும், பிரபலப்படுத்தவும் கடந்த 5 ஆண்டு களில் ரூ. 43 கோடியே 48 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா. கருத்தாக்கங்களை இந்தியில் வெளியிட 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்மையில் ஐ.நா.வின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தி மொழியில் பிரத்யேக மாக தொடங்கப்பட்டுள்ளது.” என்று முரளீதரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் அவையில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு மொழியை அலுவல் மொழியாக கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

;