tamilnadu

img

குஜராத் மத்திய பல்கலை.யில் ஏபிவிபி படுதோல்வி.. எஸ்எப்ஐ, பாப்சா - என்எஸ்யுஐ கூட்டணி வெற்றி

காந்திநகர்:
குஜராத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யை மாணவர்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர்.இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), காங்கிரசின் மாணவர் பிரிவான என்எஸ்யுஐ, பிர்சா- அம்பேத்கர்- புலே மாணவர் சங்கம்(பாப்சா), இடது ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (எல்டிஎஸ்எப்) ஆகியவை ஒன்றிணைத்து 4 இடங் களை கைப்பற்றியுள்ளனர். ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 11 துறைகளில், 5 துறைகளுக்கு பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக இந்த தேர்தல் நடைபெற்றது.இதில், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) வேட்பாளர்கள் 5 இடங்களிலும் படுதோல்விஅடைந்தனர்.மொழித்துறையில் இந்திய மாணவர் சங்கத்தின் வேட்பாளர் சித்தரஞ்சன் 166 வாக்குகளில் 94 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சமூக அறிவியல் துறையில், ‘பாப்சா’ வேட்பாளர் அஷ்ரப், 167 வாக்குகளில் 114 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். சர்வதேச ஆய்வுகளுக்கான துறையில் எல்.டி.எஸ்.எப். வேட்பாளர் பிராச்சி லோகண்டே 38 வாக்குகளில் 30 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல நூலகத் துறையில் என்எஸ்யுஐ வேட்பாளர் விஜேந்திரகுமாரும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுயேட்சை வேட்பாளர் தருண்குமாரும் வெற்றி பெற்றனர்.

;