tamilnadu

img

பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமனம்!

ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடி வகுப்பைச்சேர்ந்த பெண் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம்தும்காவில் சிடோ கன்ஹுமுர்மூ பல்கலைக்கழகம் (SKMU) உள்ளது. புகழ்பெற்ற சந்தால்சுதந்திர போராளிகளான சிடோ முர்மூ மற்றும் கன்ஹு முர்மூஆகியோரின் நினைவாக தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.

இந்தப் பல்கலைக்கழகத்திற்குத்தான், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பேராசிரியை சோனாஜாரியா மின்ஸ் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மூ பிறப்பித்துள்ளார்.சோனாஜரியா மின்ஸ், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கிறித்தவக் கல்லூரியில் தனது உயர்கல்வி வாழ்க்கையைத் துவங்கியவர். இங்கு கணிதத்தில் பட்டம் பெற்ற மின்ஸ், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மத்திய பிரதேசத்தின் பர்கத்துல்லா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். 

தில்லி 1992-இல் ஜே.என்.யு-வில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், அங்கேயே ஸ்கூல் ஆப்கம்ப்யூட்டர் அண்ட் சிஸ்டம்ஸ் சயின்ஸ் துறையின் பேராசிரியர் ஆனார். பின்னாளில் ஜே.என்.யூ. ஆசிரியர் சங்கத்தின்(ஜே.என்.யு.டி.ஏ) தலைவராகவும், சமூக நீதி மற்றும் தலித்மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்போராளியாகவும் இருந்து வந்தார்.கடந்த ஜனவரி 5 அன்று இரவு ஜே.என்.யு. வளாகத்தில் இந்துத்துவா மதவெறியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த பேராசிரியர்களில் மின்ஸூம் ஒருவர்.இந்நிலையிலேயே அவரை ஜார்க்கண்ட் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமித்து, ஹேமந்த் சோரன்தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு முன்னேறிய பழங்குடி வகுப்பைச்சேர்ந்த 2 பெண் மின்ஸ் என்று கூறப்படுகிறது.

;