tamilnadu

img

பெண்கள் - குழந்தைகளுக்கு இலவச பேருந்து வசதி... ஜார்கண்ட் அரசு அறிவிப்பு 

ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. 

முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் செயல்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்டது போல, பெண்கள் - குழந்தைகளுக்குப் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தை இலவசமாக வழங்க ஜார்கண்ட் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இலவச பொது போக்குவரத்து திட்டத்தை முதியவர்களுக்கும் நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தில்லி மாநிலத்தில் உள்ளது போலத் தரமான பொது பள்ளிகள் ஆரம்பிப்பது போன்ற திட்டங்களை நிறைவேற்ற ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜெகர்நாத் தலைமையிலான குழுவினர் தில்லி சென்று அங்குள்ள பொது பள்ளிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். பெண்கள் - குழந்தைகளுக்கான இலவச பொது போக்குவரத்து திட்டம் ஜார்கண்ட் மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

;