tamilnadu

img

கோயில் காணிக்கை எங்களுக்குத்தான்... பாஜக அரசுக்கு எதிராக அர்ச்சகர்கள் போராட்டம்!

ஹரித்துவார்:
உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற51 முக்கியக் கோயில்கள் உள்ளன. 

இங்கே வழிபாடு செய்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவதால், காணிக்கைகள் கோடிக்கணக்கில் புழங்கும். கோயில் அர்ச்சகர்கள்தான் இந்த காணிக்கையை பெற்று வந்தனர். கோயில்களையும் அவர்களே நிர்வகித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்த உத்தரகண்ட் பாஜக அரசு, மாநிலத்தின் 51 முக்கியக் கோயில்களுக்கு வரும் காணிக்கைகளை அரசே கையாள்வதுடன் நிர்வாகத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தது. இதற்காக, தேவஸ்தனம் பிரபந்தன் போர்டு என ஒரு அமைப்பையும் உருவாக்கியது. மாநில அரசுஅதிகாரிகள் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ-க்கள், வாரியத்தின் உறுப்பினர்ஆக்கப்பட்டார்கள். இதற்கு எதிராகத்தான், உத்தராண்ட் மாநில அர்ச்சர்கள் மற்றும் சாமியார்கள், கடந்த 2 வாரமாக தொடர் போராட்டம்நடத்தி வருகின்றனர்.

“பக்தர்கள் மூலம் கிடைக்கும் காணிக்கையை நம்பி வாழும் சுமார் 1500 அர்ச்சர்களின் வயிற்றில் அடிக்க உத்தரகண்ட் அரசுமுயல்கிறது; போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால், சட்டப்படிநடவடிக்கை எடுப்போம் எனவும் மிரட்டுகிறது’ என்று கங்கோத்ரி மந்திர் சமிதியின் துணைத்தலைவரான அருண் செம்வால் கொதித்துள்ளார்.

;