tamilnadu

img

இந்தியாவுடன் நாங்கள் ஒப்பந்தமே போடவில்லையே... சாபஹார் ரயில் பாதைத் திட்டம் ரத்தா?

புதுதில்லி:
ஈரான் நாட்டில், சாபஹார் துறைமுகத்திலிருந்து சஹேதான் வரை,ரயில் பாதை அமைக்கும் பணியை,இந்தியா மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கான ஒப்பந்தத்தை ஈரான்திடீரென ரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.ஈரானின் இந்த திடீர் முடிவுக்குபின்னணியில் சீனா இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில்தான், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார்அமைப்பின் துணைத் தலைவர் பர்ஹாத் மோண்டேசர் கூறியதாக புதிய தகவல் ஒன்றை ஐஆர்என்ஏசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், “சாஹேதான்- சாபஹார் ரயில் பாதைக்காக இந்தியாவுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்துவிட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது, ஏனெனில் ஈரான், சாஹேதன் - சாபஹார் ரயில்வே தொடர்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் ஈரான் செய்யவில்லை” என்று பர்ஹாத் மோண்டேசர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

“ஈரான் நாட்டின், சாபஹாரில் முதலீடு செய்வதற்காக இந்தியாவுடன், இரண்டு ஒப்பந்தங்களில்மட்டுமே ஈரான் கையெழுத்திட்டுள் ளது. அதில் ஒன்று துறைமுகத்தின்இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் தொடர்புடையது. இரண்டாவது, அந்த துறைமுகத் தில், இந்தியாவின் 150 மில்லியன் டாலர் வரையிலான முதலீடு தொடர்புடையது.இந்தியா செய்ய விரும்பிய முதலீடுகளின் பட்டியலில் சாபஹார் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும்ரயில்வே கட்டமைப்பு ஆகியவைஇருந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகளின் போது அது ஒப்புக்கொள்ளப்படவில்லை” என்று பர்ஹாத் மோண்டேசர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

;