tamilnadu

img

பாஜகவை விளாசிய நடிகை ஊர்மிளா இனியும் கும்பலாட்சிக்கு இடையே மக்கள் வாழ முடியாது...

மும்பை, ஏப்.9-

பிரபல பாலிவுட் நடிகையாக வலம்வந்தவர் ஊர்மிளா மடோன்கர். தமிழில் நடிகர் கமலுடன் இணைந்து ‘இந்தியன்’ படத்திலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஊர்மிளாவை, வடக்குமும்பை வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில், ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்’ ஏடு, ஊர்மிளாவை பேட்டி கண்டுள்ளது. அந்த பேட்டியில் ஊர்மிளா கூறியிருப்பதாவது:என்னை ஒரு ‘கிளாமர் டால்’ (கவர்ச்சி பொம்மை) என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். இது எனக்குநல்லது தான். என்னைப் பற்றி அவர்கள்குறைவாக நினைக்கும் போது, அதற்குஎதிராக என்னால் சிறப்பாக செயல்படமுடியும். வார்த்தைகளை விட செயல்களே உரக்கப் பேசும் என்று நான் நம்புகிறேன். ‘மாற்றத்தை உருவாக்க, நீமுதலில் மாறு’ என காந்திஜி சொன்னதுபோல், நான் மாறியிருக்கிறேன்.கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்நிறைய இடத்தில் நாம் குரல் கொடுக்கவேண்டும் என நினைத்திருக்கிறேன், ஆனால் முடியவில்லை. அவ்வாறுகுரல்கொடுத்த மக்கள் பலர், ‘ஆன்டி–இந்தியன்’ என்று அழைக்கப்பட்டார்கள். வேறு நாட்டுக்கு செல்லுமாறு மிரட்டப்பட்டார்கள். நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையே என்றுகூறினால் கூட, அதை தேச பக்திக்கு எதிரானதாக மாற்றினார்கள்.இவற்றையெல்லாம், முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பயங்கரமான விஷயங்களாக நான் கருதுகிறேன்.


மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒருவரை அடித்துக் கொன்ற கும்பலுக்கு இடையே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியின் பிரச்சார வண்டியைப் பார்த்தேன். அனைத்தும் குஜராத்தி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. வடக்கு மும்பையில், மகாராஷ்டிரியன்கள், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும்குஜராத்திகள் என அனைவரும் இருக்கிறார்கள். இது அனைவருக்குமான இடம். ஆனால், பாஜகவிடம் அந்த பார்வை இல்லை.நாட்டை சீரமைப்பதற்குப் பதில், நாட்டிலுள்ள நகரங்களின் பெயரை மாற்றுவதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது. அவர்கள் பூமியில்நடக்கும் பிரச்சனைகளை பேசமறுத்து, நிலவில் நடக்கும் நிகழ்வையே அசைபோடுகிறார்கள். கடந்த5 ஆண்டுகளில் ஏற்படாத முன்னேற்றத்தைப் பற்றியும் அவர்கள் பேச முன் வரவில்லை. என்னை மதம் மாறச் சொல்லி என் கணவர் வீட்டார் என்னிடம் கூறவில்லை, நானும் மாறவில்லை. என்கணவர் பெருமைக்குரிய முஸ்லிம், நான் பெருமைக்குரிய இந்து. அதுதான் நம் நாட்டிற்கும், எங்களது இல் வாழ்க்கையிலும் அழகு சேர்க்கிறது. அவர்கள் முஸ்லிமை ஒரு குறிப் பிட்ட விஷயத்துக்குள் அடைக்கவும், என்னை சந்தேகிக்கவும் முயல்கிறார்கள். ஆனால் நான் எனது சிந்தனையில் தெளிவாக இருக்கிறேன். சாதி,மத, இன அடிப்படையில் மக்களைபிரிக்க முயற்சிப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.”இவ்வாறு ஊர்மிளா மடோன்கர் கூறியுள்ளார்.

;