tamilnadu

img

ஹரியானா ஆள்பிடி அரசியல் மூலம் பாஜக ஆட்சி

சண்டிகர், அக்.26-  தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிய மைப்போம் என்ற கனவு தகர்ந்து, ஆள்பிடி அரசியல் மூலம் ஜனநாயக ஜனதா கட்சிக்கு துணை முதல்வர் பத வியை கொடுத்துத்தான் ஹரியானா வில் ஆட்சியமைக்கிறது பாஜக. ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை.  40 தொகுதி களை பெற்றுள்ள பாஜக,  சுயேட்சை களை வளைத்துப்பிடித்து, பேரம் பேசி ஆட்சியமைப்பதற்கான நட வடிக்கையில் இறங்கியது. கொலை வழக்கில் தொடர்புடைய சுயேட்சை எம்எல்ஏ தலைமையில் ஏழு சுயேட் சைகளை வளைத்துப் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டது பாஜக இதற்கு அந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 10 தொகுதி களை வைத்துள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) பேச்சு வார்த்தை நடத்தியது. 

இதனிடையே  ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா வை வரவழைத்து மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலை வருமான அமித்ஷா பேசினார். இதில் பேரம் படிந்ததைத் தொடர்ந்து ஜேஜேபியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜன நாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளதாக வும்  அக்கட்சிக்கு துணை முதலமைச் சர் பதவி வழங்கவுள்ளதாகவும் அமித்ஷா அறிவித்தார். இந்நிலையில், சண்டிகரில் நடை பெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் களின் கூட்டத்தில்  சட்டமன்றக் கட்சித் தலைவராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய பார்வையாளராக, மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக பொதுச் செயலா் அருண் சிங் ஆகி யோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகை யில், ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை மனோகா் லால் கட்டரைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருவாா் என்று தெரிவித்தார். பின்னர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஞாயிறன்று பிற்பகல் 2.15 மணியள வில் ஆளுநர் மாளிகையில் தாம் முத லமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெறும். துஷ்யந்த் சிங் சவு தாலா துணை முதலமைச்சராக பதவி யேற்பார் என்று தெரிவித்தார்.

;