world

img

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷுவில் மதியம் 2.29 மணியளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தசக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இப்பகுதியில் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜன.1 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளனர், 565 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜப்பானின் ஹொகுரிகு பகுதியில் 23,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.

;