politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலு மணி :- சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது எதிர்க்கட்சிகளின் பொய்.
ச.சா - நீங்க இன்னும் தில்லில இருந்து திரும்பலயா..??
_ _ _
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் :- மம்தாவின் விரக்தியே வன்முறைக்குக் காரணம்.
ச.சா - மக்கள் மதிக்கும் தலைவர்களின் சிலைகள நீங்க உடைக்குறதுக்கு என்ன காரணம்..??
_ _ _
செய்தி :- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாகக் குறையும் என்று பிட்ச் ஆய்வு நிறுவனம் தகவல்.
ச.சா - ஆளாளுக்கு ஏற்றி இறக்கிட்டு இருக்காங்களே..??
_ _ _
முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.
ச.சா - குட்கா மேல எடுத்த நடவடிக்கை மாதிரியா..??

;