internet

img

விங் கமாண்டர் அபிநந்தனை மையமாக்கி ‘மொபைல் கேம்’ வெளியிடுகிறது விமானப்படை

விங் கமாண்டர் அபிநந்தனை மையமாக்கி, விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது. 

இந்திய விமானப்படை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஸ் இயங்குதளத்தில் மொபைல் கேம் ஒன்றை  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்திய விமானப்படை தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அதற்கான டீசரையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில், ரஷ்ய தயாரிப்பு விமானமான மிக் 21 விமானத்துடன் ஒரு போர் விமானி சண்டையிடுகிற காட்சி  காணப்படுகிறது.  இதில் வரும் விமானியின் தோற்றம், இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் போல் காணப்படுகிறது.

இந்த மொபைல் கேம் (ஐ.ஏ.எஃப் கேம்) வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் என்றும், இந்த விளையாட்டு ஒருவர் மட்டுமே விளையாடும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், சில வாரங்களில் பலர் சேர்ந்து விளையாடும் பதிப்பை வெளியிட உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

;