tamilnadu

img

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை திரும்பச் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக இயல்புநிலை திரும்பச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.சென்னையில் வியாழனன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றிருக்கின்றது. காஷ்மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றவர்களை எல்லாம் விடுதலை செய்திட வேண்டும் என்பதே அந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.அதேபோல், காஷ்மீரில் தொலைத்
தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் எனவும் அந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சி, திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சரத் யாதவ் அவர்களின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் போன்ற கட்சிகளும் அந்தந்த கட்சி களினுடைய தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கின்றார்கள். எனவே, அது ஒரு மிகப்பெரிய வெற்றிகர மான ஆர்ப்பாட்டமாக நடந்தேறி இருக் கின்றது. திமுகழகத்தின் அழைப்பை ஏற்று அதில் பங்கேற்ற கட்சிகளினுடைய தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் கூறினார்.

;