cinema

img

உடல் நலக் குறைவால் பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் இன்று காலமானார்.

மிஸ் லீலாவதி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர் உடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி, கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால், அவர்  இன்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

 

;