districts

img

திருப்பூரில் தொழில் நெருக்கடிக்கு பாஜக அரசின் கொள்கைதான் காரணம்

திருப்பூர் மார்ச் 28 - திருப்பூர் தொழில் நெருக்க டிக்கு பாஜக அரசு பின்பற்றும் கொள்கைகள் தான் காரணம். எனவே பாஜக அரசு தோற்கடிக் கப்பட்டு, மாற்றுக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் கே.சுப்பராயன் கூறினார். வியாழனன்று காலை திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாள ராக போட்டியிடுகிற கே.சுப்பரா யன் வேலம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானம் மற்றும் டிசெட் மைதானம் ஆகிய இடங்க ளில் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார்.  அவர்களிடம் சுப்பராயன் பேசும்போது, திருப்பூரில் தொழில்  நெருக்கடிக்கு பாஜக அரசின் கொள்கைதான் காரணம். மாற்று கொள்கை அரியணை ஏற  வேண்டும் என்று பேசினார். ஜவ ஹர்லால் நேரு இருந்த காலத்தில்  எம்.ஆர்.டி.பி. சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதாவது ஏகபோக முதலாளிகள் தடைச் சட்டம். அந்த சட்டத்தின் படி சிறு, குறு நடுத்தர தொழில் சம்பந்தப்பட்ட எந்த தொழிலிலும் ஏகபோக முதலாளிகள் ஈடுபடக் கூடாது என்ற தடுக்கப்பட்டது. அதே போல பிற்படுத்தப்பட்ட பகுதி  என்று சில பகுதிகள் அறிவிக்கப் பட்டு, அந்தப் பகுதிகளுக்கு பல் வேறு சலுகைகளை கொடுத்து, நாடு முழுவதும் சிறு, குறு நடுத் தர தொழில் வளர்வதற்கு உரிய கொள்கையை வகுத்தவர் ஜவ ஹர்லால் நேரு. அவரது காலத்தில் தான், சிறு  குறு நடுத்தர தொழில்கள் வளர்ந் தன. வேலைவாய்ப்பில் 92% சத வீதம் சிறு குறு நடுத்தர தொழில் கள் தான் கொடுக்கிறது. இது, அரசு  வழங்கி உள்ள புள்ளி விவரம்.  வெறும் 7% சதம் வேலை வாய்ப்பை  மட்டும் தான் கனரக தொழில்கள்  வழங்குகின்றன. பெரு நிறுவ னங்கள் பெரிய அளவிற்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை.  சிறு, குறு நடுத்தர தொழில்கள்  வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு தற்போது நெருக்க டிக்கு உள்ளாகி இருக்கிறது. திருப்பூரில் அதானி கம்பெனி  தொடங்குகிறார். கார்ப்பரேட்  நிறுவனங்கள் தொழிற்சாலை களை துவக்குகிறார்கள். ஏனென் றால், ஜவஹர்லால் நேரு காலத்தில்  இருந்த எம்.ஆர்.டி.பி சட்டம்  நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள் ளது. ஒன்றிய அரசின் கொள்கை கள் நம்முடைய தொழிலை பாதிக்கிறது. நம்முடைய தொழிலை பாதிக்கிற ஒரு கொள்கை மாற வேண்டுமானால், அதற்கு எதிரான கருத்தோட்டம் கொண்டவர்கள் தான் அதிகாரத் திற்கு வர வேண்டும். அதற்கு ஏற்ற  வகையில் இந்தியா கூட்டணி அதை  முன் வைத்து இந்த தேர்தலில் போட் ்டியிடுகிறது. விவசாயம் பாதிப்பதனால் கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. நகர்ப்புறத்திலும் வேலை  வாய்ப்பு இல்லை. ஆகவே, சுதந்திர  இந்தியாவில் 43 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு, வேலை வாய்ப்பு இன்மை நிலவுகிறது. தற்போது இருப்பது போல வேலை யின்மை என்றுமே இருந்தது இல்லை. பாஜக அரசின் கொள்கை மாற வேண்டும் என்றால், ஆட்சி  மாற வேண்டும். மாற்றுக் கொள் கையின் பிரதிநிதியாக நான் போட்டியிடுகிறேன். ஆகவே, நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். மக்களிடம் ஆதரவ ளிக்கச் சொல்ல வேண்டும்,” என் றார். வாக்கு சேகரிப்பின் போது, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி  கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;