districts

தொழிற்சாலைகளில் கொரானா பரவுவதால் ஊதியத்துடன் விடுப்பு: சிஐடியு வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மே 11- பொது முடக்க காலத்திலும் தொழிற்சாலைகள் இயங்கி வருவ தால் கொரானாத் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதம்  ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க  வேண்டும் என சிஐடியு செங்கல் பட்டு மாவட்டக்குழுவும் திருவள்ளூர்  மாவட்டக்குழுவும் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்குவது தொற்று  பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது .சுமார் 200 பேர் முதல் 1,000 பேர் வரை தொழிற்சாலையில் குவியலாக பணிபுரிவதும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தொற் றுக்கு உள்ளாகி வீடு திரும்பும் போது அவர்களின் குடும்பம் முழுவ தும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில இயங்கிருவம் போர்டு கார் தொழிற் சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 7,000க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிகின்றனர் மேலும்  இதன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகளான யாசக்கி, ஜேபிஎம், கூப்பர் ஸ்டாண்ட், ஹனான்,  காம்ஸ்டார், லீயர், பெருஷியா, விஸ்டியான், மதர்ஸான் என 20 ஆயி ரம் தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர்.

அதேபோல் மாவட்டம் முழுவதும் சுமார் 300 தொழிற்சாலைகளில் 60  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இந்த பொது முடக்க காலத்தில் பணி செய்து வருவதால் இந்த நிறுவனங்களால் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பர வும் நிலை ஏற்பட்டுள்து. இதனால் ஒரு மாதகாலத்திற்கு ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கவும், ஆலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

கொரோனா பரவலை கட்டுப் படுத்த தொழிற்சாலைகளில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்து டன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்  என  திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய ருக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் கடிதம் எழுதியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பேர் முதல் 2,000 பேர் வரை பணி புரியும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரி யும் பல தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தொழிற்சாலையில் பணிபுரி யும் தொழிலாளர்களும் அடங்குவர். அனைத்து தொழிற்சாலைகளும் முழுமையாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிலை  நீடிக்கிறது. தமிழக அரசு அத்தியாவ சிய தொழில்கள் மட்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் அர சின் அனுமதி பெற்று தொழிற்சாலை களை இயக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இயக்குவதால் தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு அத்தியாவசிய தொழிற்சாலை களை தவிர்த்து இதர தொழிற் சாலைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்திடவும், அத்தியா வசிய அடிப்படையில் இயங்கும்  தொழிற்சாலைகளில் தொழிலா ளர்கள் வருவதற்கு வாகன வசதி களை ஏற்படுத்தவும், இருசக்கர  வாகனங்களில் தொழிற்சாலை களுக்கு பணிக்கு வரும் தொழிலா ளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வா கங்கள் வழங்கவும், தொறறு காலத்தில் பணிக்கு வரும் தொழிலா ளர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்க வும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;