districts

img

பட்டுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் நீதிமன்ற உத்தரவை அடுத்து நடவடிக்கை

 தஞ்சாவூர், மார்ச்.17- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி க்கு சொந்தமான பேருந்து  நிலையத்தில் 56 கடைக ளும், மற்ற இடங்களில் 43 கடைகளும் என மொத்தம் 99 கடைகள் உள்ளன.  இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, நகராட்சி மண்டல இயக்குநர் அலுவ லகம் நியமித்த குழு, மார்க்கெட் நிலவரம், பொ துப்பணித்துறை அறிக்கை யின் அடிப்படையில், வாட கைக் கட்டணம் 4 மடங்கு  அதிகமாக உயர்த்தப்பட்டது.  இதை பெரும்பாலான கடைக்காரர்கள் ஏற்றுக் கொண்டு வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படும் நிலை யில், நியாயமற்ற முறையில் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ள வாடகையை குறைக்க வேண்டும், கஜா புயல், கொரோனா என தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வு சுமையை தாங்க முடியாது என 10 கடைக்காரர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதையடுத்து வழக்கு விசாரணையின் போது, கடை வாடகை பாக்கியை செலுத்திவிட்டு, பரிகாரம் காண நீதிமன்றத்தை மீண்டும் நாடுமாறு நீதிபதி கள் உத்தரவிட்டனர். மேலும் மார்ச் 15க்குள் கட்டணத்தை செலுத்திவிடுமாறும் அப்போது அறிவுறுத்தி இருந்தனர்.  இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் அளித்த நிலையில், இரண்டு கடைக்காரர்கள் மட்டும் ரூ.49 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தியுள்ளனர். மீதம் இருந்த 8 கடைக்காரர்கள் வாடகை செலுத்தவில்லை.  இதையடுத்து, பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாக ஆணையர் சுப்பையா உத்தரவின் பேரில், புதனன்று மாலை, நகராட்சி வருவாய் ஆய்வா ளர் ரவிச்சந்திரன், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம், குப்புசாமி, எழுத்தர் மனோ தண்டபாணி மற்றும் வரிவசூல் அலு வலர்கள், நீதிமன்ற உத்த ரவுப்படி வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தனர்.

;