districts

img

திட்டக்குடி ஊராட்சி பெண் செயலாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திட்டக்குடி ஊராட்சி செய லாளராக பணியாற்றி வருபவர் கௌரி(32), அதே ஊரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவ ருக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத் தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.  இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்திற்கு  வேறொரு ராமச்சந்திரனும் விண்ணப்பித்தி ருந்தாக கூறப்படுகிறது. பெயர் குழப்பத் தால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள் ளனர். இதனால் தனக்கு வீடு கட்ட ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதற்கான ஆணை வழங்கவில்லை, தாமதத் துக்கு ஊராட்சி செயலாளர் கௌரிதான் காரணம் என்று கூறி குடிபோதையில் இருந்த  ராமச்சந்திரன், வெள்ளிக்கிழமை காலை ஊராட்சி செயலாளர் கௌரியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படு கிறது.  

அருகில் இருந்த பெண் தூய்மை காவலர்  ஜெயராணி (52) இதுகுறித்து கேட்ட நிலை யில் அவரையும் ராமச்சந்திரன் தாக்கியுள் ளார். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், அரசு பணியில் இருந்த  ஊழியரை தகாத வார்த்தையால் திட்டி  தாக்கிய ராமச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பட்டுக் கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோவிந்தரா ஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்டார  வளர்ச்சி அலுவலர் சுதா, மற்றும் அலுவலக ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். காவல்துறை உரிய நடவ டிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய, மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என  ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

;