districts

img

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர், ஏப்.24 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரிக் கனவு” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் “என் கல்லூரிக் கனவு” என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,  சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் மாணாக் கர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு  உயர்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத் தித் தருவதற்காக அமைக்கப்பட்டு உள்ளது.  மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கன வினை நனவாக்கும் வகையில் அவர் களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள்  பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்பு கள், பட்டயப் படிப்புகள் குறித்து,  கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது,  மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக் கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழி காட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல்  போன்ற விவரங்கள் புகழ்பெற்ற  வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர் களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.  இத்தகைய நிகழ்ச்சிகள், மாண வர்கள் தங்களின் எதிர்கால குறிக் கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களும், சரி யான உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் புக ழேந்தி, சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்ட ஆலோசகர் கணபதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் அமுதா உள்ளிட்ட  அரசு அலுவலர்கள், மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். நாளை கரூரில் நடக்கிறது அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் மாணாக்கர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை   உயர்த்தும் நோக்கோடு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு  பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள், அப்படிப்புகளை வழங்கும்  கல்வி நிறுவனங்கள் குறித்து  Mass Movement  for transformation (MMT) and   NURTURE என்ற தன்னார்வ இயக்கத் தின் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதில், கரூர் மாவட்டத்திற்கு உட் பட்ட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் களுக்கு ஏப்.26 அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில், இந்த வழிகாட்டுதல் நடைபெற உள்ளது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக் கர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;