districts

img

போக்குவரத்து கிளை மேலாளர் தள்ளிவிட்டதில் அரசுப் பேருந்து நடத்துநருக்கு நெஞ்சுவலி

அறந்தாங்கி, ஏப்.27 - அறந்தாங்கி அரசு போக்குவரத்து நடத்து நர் செந்தில்நாதனை, கிளை மேலாளர் தள்ளிவிட்டதால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். புதுக்கோட்டை பொன் நகர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (38). இவர் அறந் தாங்கி அரசு போக்குவரத்து கிளையில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். மேலும்,  சிஐடியு போக்குவரத்து மத்திய தொழிற்சங்க  மாவட்டத் துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் ‘அறந்தாங்கி அரசு  போக்குவரத்துக் கழக நகரப் பேருந்தில் நிரந்தரமாக பணியாற்றிய ஒருவர், பதவி  உயர்வு பெற்றுச் சென்றதால் அந்த இடத்திற்கு  சிஐடியு-வை சேர்ந்த தொழிலாளியை பணிய மர்த்தும்படி’ அறந்தாங்கி கிளை மேலாளர் மணிவண்ணனிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு போக்குவரத்து கிளை மேலாளர்,  சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ளவர்களை எல்லாம் அந்த இடத்தில் பணியமர்த்த முடி யாது. அமைச்சர் சொல்பவரைத் தான் பணி அமர்த்துவேன் என செந்தில்நாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தள்ளி விட்டுள்ளார்.  இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த  நடத்துநர் செந்தில்நாதனுக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி  வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் செந்தில்நாதனை, அரசு போக்குவரத்து கழக சிஐடியு மத்திய சங்க  நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்த னர். மேலும் அறந்தாங்கி போக்குவரத்து கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

;