districts

கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கல்லூரி நாளை திறப்பு முதல்வர் காணொலியில் திறந்து வைக்கிறார்

மன்னார்குடி, ஜுலை 5 - திருவாரூர் மாவட்டம் வருவாய் வட்ட  தலைநகரமான கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலைக் கல்லூரியை ஜூலை 7 (வியா ழன்) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி  வைக்கிறார். கூத்தாநல்லூர் மகளிர் கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 20 புதிய கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் வியாழனன்று திறந்து  வைக்கிறார். இவைகளில் 6 கல்லூரிகள் டெல்டா மாவட்டங்களில்  மட்டும் துவக்கப்பட  உள்ளன. இந்த 20 கல்லூரிகளில் கூத்தா நல்லூரில் உள்ள கல்லூரி மட்டுமே மகளிர் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வித் துறை வட்டாரத் தகவல் களின்படி, முதல்வர் துவக்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச் சர், மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். கல்லூரியின் அடிப்படை கட்டுமான வசதி கள், மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்பு கள் முறையாக துவக்கப்படுவதற்கான முதற் கட்ட ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கு மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவரும் சிறந்த நிர்வாக அனுபவமும் பெற்ற முனை வர் மாறன் பொறுப்பு முதல்வராக நிய மிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். 40 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட  கூத்தாநல்லூர், அதிக இஸ்லாமிய சிறு பான்மை மக்கள் வசிக்கும் நகரமாகும். இந்நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாழும் ஏழை-எளிய மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த அரசு கலைக் கல்லூரி திமுக ஆட்சியில் நனவாகியுள்ளது. ஏற்க னவே இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் ஆன்-லைனில் பெறப் பட்டு வருகின்றன. தங்கள் கிராமங்களுக்கு அருகிலேயே கல்லூரி வரவுள்ளது என்ற செய்தி கூத்தாநல்லூர் வட்டார மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;