districts

img

வெவ்வயல்பட்டி கிராம மக்களும் சின்னத்துரை எம்எல்ஏ மீது நம்பிக்கை

புதுக்கோட்டை, ஏப்.19- சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை வெவ்வயல்பட்டி கிராம மக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்களித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வத்தனாக் குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வெவ்வயல்பட்டி கிராமத்தில் தனியார் கிரஷர் குவாரி இயங்கி வருகிறது. இக்குவாரியினால் தங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் குற்றம் சாட்டி பொதுமக்கள் பல்வேறு போராட் டங்கள் நடத்தி வருகின்றனர்.

பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகும் குவாரியை அவ்வப்போது மூடுவதும், பின்னர் இயக்கு வதுமாக இருப்பதால், நாடாளு மன்றத் தேர்தலை புறக்கணிப்ப தாக வெவ்வயல்பட்டி கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதன் படி, வெள்ளிக்கிழமை அவர்கள் யாரும் வாக்களிக்க வாக்குச்சாவ டிக்குச் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து கந்தர் வக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராம மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னர்.

தேர்தலுக்குப் பிறகு இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்திப் பது, மேல்முறையீடு செய்து சட்டப் போராட்டத்தைத் தொடரு வது, மக்கள் மன்றத்திலும் போராட் டத்தை முன்னெடுப்பது என அவர்களிடம் உறுதியளிக்கப் பட்டது. வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெவ்வயல்பட்டி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். பீமராஜ், கிளைச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;