games

விளையாட்டு செய்திகள்

கலிபோர்னியா
இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் சின்னர் வெளியேறினார்

முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இந் தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெ ரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயி றன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசை யில் 3-ஆவது இடத்தில் உள்ள   இத்தா லியின் சின்னரை எதிர்கொண்டார். 

தொடக்க செட்களில் (6-1) சின்னர்  ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டா வது செட்டில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் சாம்பி யனான இத்தாலியின் சின்னர், தொடரி லிருந்து வெளியேறினார். 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 17-ஆவது இடத்தில் உள்ள  அமெரிக்காவின் டாமி பவுலை  எதிர்கொண்டார். இருவரும் அதிரடி யாக மாறி மாறி புள்ளிகளை குவிந்த தால், இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு கேமும் (செட் புள்ளிகள்) பரபரப்பாக நடைபெற்ற நிலையில், இறுதியில் மெத்வதேவ் 1-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

இந்த பிரிவிற்கான இறுதி ஆட்டம் திங்களன்று அதிகாலை நடைபெறு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா டென்னிஸ் மைதானங்களில் படையெடுக்கும் தேனீக்கள்
50 ஆண்டு பழமையான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை, கலிபோர்னியா டென்னிஸ் மைதானங்களில் தேனீக்கள் அடிக்கடி படையெடுத்து வருகின்றன. கடந்த வியாழனன்று அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜூவரேவ் (ஜெர்மனி) இடையேயான காலிறுதி ஆட்டத்தில் தேனீக்கள்  படையெடுத்த நிலையில், தேனீக்கள் தாக்குதலில் அல்காரஸ் லேசான அளவில் காயமடைந்தார்.

சற்று வித்தியாசம்
பொதுவாக விளையாட்டு மைதானங்களில் தேனீக்கள் படையெடுப்பது வழக்கமான விஷயம்தான். ஆனால் ஒருமுறைதான் தேனீக்களின் வருகை இருக்கும், அதனபிறகு வராது. ஆனால் என்ன சிறப்பு என்று தெரியவில்லை, கலிபோர்னியா டென்னிஸ் மைதானத்தில் தேனிக்கள் புகுந்து வீரர்கள் - ரசிகர்களை  கதி கலங்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீளாத ஜோகோவிச்
மியாமி தொடரில் இருந்து வெளியேறினார்

டென்னிஸ் உலகின் முக்கிய சர்வதேச தொடரான அமெரிக்காவின் இந்தியன் வேல்ஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் மூன்றாவது சுற்றில் டென்னிஸ் உலகின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும் (24), தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 123ஆவது இடத்தில் உள்ள இளம் வீரரான நார்டியிடம் (இத்தாலி) வீழ்ந்தார். நார்டி கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தகுதி சுற்றுக்கு கூட  நுழைந்தது கிடையாது. இப்படி ஒரு சூழல் உள்ள  நிலையில், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பிரம்மாண்ட அனுபவம் கொண்ட ஜோகோவிச்சை,  நார்டி அசால்ட்டாக வீழ்த்தியது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஜோகோவிச் இன்னும் மீளாத நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் மியாமி சர்வதேச தொடரில் இருந்து ஜோகோவிச் விலகுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் 2024 : சென்னையில் இன்று டிக்கெட் விற்பனை
17-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்குகிறது. துவக்க ஆட்டம் (சென்னை - பெங்களூரு) தமிழ்நாடு தலைநகர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை திங்களன்று முதல் தொடங்குகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ7,500 வரை (இருக்கைக்கு ஏற்ப விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- ஐபிஎல் - இன்னும் 4 நாட்கள்

;