games

img

விளையாட்டு செய்திகள்

டபிள்யு.பி.எல் 2024  

கோப்பை யாருக்கு?

தில்லி - பெங்களூரு இன்று பலப்பரீட்சை

ஆடவருக்கு ஐபிஎல் என்ற பெயரில் டி-20 லீக் நடத்தப்படுவது போல மகளிருக்கு டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) என்ற பெயரில் டி-20 தொடர்  நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது சீசன்  கடந்த மாதம் தொடங்கியது.

லீக் ஆட்டங்களின் முடிவில் தில்லி, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த தில்லி அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறிய நிலையில், மும்பை -   பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

வெள்ளியன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வெறும் 5 ரன்கள் வித்தியா சத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிக்கு முன்னேறிய நிலையில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தில்லி - பெங்களூரு அணிகள் கோப் பைக்காக பலப்பரீட்சை நடத்து கின்றன. முதல்முறையாக கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ப தால், இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இறுதி ஆட்டம்
தில்லி - பெங்களூரு 
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18,
 ஜியோ சினிமா 
(ஒடிடி)

பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 
ரூ.6 கோடி
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 
ரூ. 3 கோடி

கவனத்தை ஈர்த்த பெங்களூரு அணி
ஐபிஎல் கிரிக்கெட் பிரிவில் முக்கிய நட்சத்திர அணி யாக பெங்களூரு அணி உள்ளது. பெங்களூரு அணி முதல் இரண்டு தொடர்களை தவிர மற்ற 14 தொடர்க ளில் மிக அருமையாக விளையாடினாலும், இறுதிக்கட்ட சொதப்பல்களால் கோப்பையை கையில் ஏந்துவது கானல் நீராகவே உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் பிரிவில் தங்கள் ஆதரவு அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெங்களூரு அணி கோப்பையை வெல்லட்டும் என்ற பரிதாபமான ஆதரவு மனநிலையை அளிக்கத்  தொடங்கியுள்ளனர். ஐபிஎல் பிரிவில் கலக்கும் கோப்பைக்காக மல்லுக்கட்டும் சென்னை, மும்பை அணிகள் இந்திய கிரிக்கெட் உலகில் பிரசித்திபெற்ற அணிகளாக உள்ள நிலையில், கோப்பை யை வெல்லாமலேயே பெங்களூரு அணியும் தனக்கென்று இரு இடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் அணியில் பெங்களூரு அணி யின் மீதான பார்வை, டபிள்யு.பி.எல் தொடரிலும் எதிரொ லித்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே குரல் கொடுத்துள்ளது.

 

;