games

img

விளையாட்டு செய்திகள்

இந்திய விளையாட்டு உல கின் முதன்மையான முதல்தர  கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை யின் 89-ஆவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 

மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டம் திங்க ளன்று தொடங்கியது. மும்பை - விதர்பா  (கிழக்கு மகாராஷ்டிரா) அணிகள் மோதிய இந்த இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 119 ரன்கள் முன்னிலை யுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து, விதர்பா அணிக்கு வெற்றி இலக்காக 538 ரன்கள் நிர்ணயம் செய்தது. 

மிக மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலை யில், மும்பை அணி 169 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று 42ஆவது முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது. 

மும்பை வீரர் முஷீர்கான் ஆட்ட நாயகனாகவும், மற்றோரு மும்பை வீரர் தனுஷ்கோடியன் தொடர் நாய னாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

டபிள்யு.பி.எல் 2024
இறுதிக்கு முன்னேறுவது யார்?
மும்பை-பெங்களூரு இன்று மோதல்

இரண்டாவது சீசன் டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) டி-20 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் தில்லி, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த தில்லி அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறிய நிலையில், மும்பை, பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், வெள்ளியன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தில்லி அணியுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும். இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது.

எலிமினேட்டர் ஆட்டம்

மும்பை - பெங்களூரு 
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்
தரவரிசை இல்லாத சீன வீராங்கனையிடம் வீழ்ந்த கசட்கினா

சர்வதேச டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. 

தற்போது இந்த தொடர் இறுதிக்கட்ட த்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்ட த்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் 11-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் கசட்கினா தரவரிசையில் இல்லாத சீனா வின் யு யுவானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் யு யுவான் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய நிலை யில், ரஷ்யாவின் கசட்கினா அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். 

அமெரிக்காவின் கவுப், கிரீஸின் சக்கரி ஆகியோர் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

நார்டி அவுட்
ஆடவர் ஒற்றையர் பிரிவு உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வெளி யேற்றிய தரவரிசை இல்லா வீரரான இத்தாலியின் நார்டி, தனது 4-ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பவுலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சுதாரித்து விளையாடிய பவுல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற நார்டி வெளியேறினார்.  ரஷ்யாவின் மெத்வதேவ், டென்மார்க்கின் ரூனே ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.

;