games

img

விளையாட்டு செய்திகள்

கலிபோர்னியா
இந்தியன் வேல்ஸ் டென்னிஸ்
அரையிறுதியில் அல்காரஸ்

அமெரிக்காவின் கலிபோ ர்னியா நகரில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசை யில் 6-ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 7-ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூனேவை 7-5,  6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரூத் அதிர்ச்சி

தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள நார்வேயின் ரூத், தரவரிசை யில் 17-ஆவது இடத்தில் உள்ள டாமி பவுலிடம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்த நிலையில், டாமி பவுல் அரையிறுதிக்கு முன்னேறி னார்.

வொஸ்னியாக்கிக்கு காயம்: ஸ்வியாடெக் முன்னேற்றம்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலி றுதி ஆட்டத்தில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் இல்லாத முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பி யனான டென்மார்க்கின் வொஸ்னி யாக்கியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது காயத்தால் வொஸ்னியாக்கி வெளி யேற, அதிர்ஷ்ட வாய்ப்புடன் ஸ்வியா டெக் அரையிறுதிக்கு முன்னேறினார். எனினும் ஸ்வியாடெக் 6-4, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கவுப், தரவரி சையில் இல்லாத சீனாவின் யு யுவானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் கவுப் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதே போல மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கிரீஸின் சக்கரி 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நவர்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மீண்டும் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 
ஏழைக் குழந்தைகளுக்கு 
இலவசமாக உணவு வழங்கிய ரசிகர் 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டருமான ரிஷப் பண்ட் கடந்த 2022இல் தில்லியிலிருந்து - உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு காரில் சென்றார் (பென்ஸ் - ஜெர்மனி). ரிஷப் பண்ட் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. உள்ளூர்வாசியின் துடிப்பான செயலால் தலை மற்றும் காலில் பலத்த காயத்துடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டார். 14 மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க (தில்லி அணிக்காக) உள்ள நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை கொண்டாடும் வகையில் தில்லியைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) தனது சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளார். 

இந்நிகழ்வு சமூகவலைத்தளத்தில் டாப் ஆர்டரில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், மேலும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளாசும் ஒவ்வொரு சிக்சருக்கும் இதே போன்று இலவச உணவு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

;