india

img

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இஸ்லாமியர்கள் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38), ஆட்டோ ஓட்டுனரான இவர், சிறுநீரகக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளியன்று தொழுகை முடிந்ததும் நிதி திரட்டினர். தொழுகை நேரத்தில் மட்டும் 1.38 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. 

அதனை தொடர்ந்து, ராகேஷ் பாபுவின் சிகிச்சைக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியின் செயலாளர் பாசிம்பாரி என்பவர் கூறுகையில், நிதி திரட்டி சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். அவரது மதம் பற்றி சிந்திக்கவில்லை. அவரது அம்மாவின் சிறுநீரகம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே அவரது சொந்த வீட்டை விற்றுதான் அறுவை சிகிச்சை நடந்தது. தானம் பெற்ற சிறுநீரகமும் சேதமானது. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவாகும். நாங்கள் விரைவிலேயே மீதித் தொகையையும் திரட்டுவோம். இதை நாங்கள் சொன்னதும், மசூதிகளின் இமாம்களும் ஏற்றுக் கொண்டனர் என்று தெரிவித்தார். 

;