india

img

கொரோனாவிலும் அடங்காத சங்-பரிவாரங்கள்..... இஸ்லாமியர்க்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக பொய்ப் பிரச்சாரம்...

 கொல்கத்தா: 
கொல்கத்தா இஸ்லாமியா மருத்துவமனையில், இஸ்லாமியர் களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக் கப்படுவதாக சங்-பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் கிளப்பிய பிரச்சாரம் பொய் என்று தெரியவந்துள்ளது.

கொல்கத்தா இஸ்லாமியா மருத்துவமனை 1926-ஆம் ஆண்டில்துவங்கப்பட்டதாகும். நூறாண்டுகளைக் காணப்போகும் இந்த மருத் துவமனை, கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இதனிடையே, கொரோனா 2-ஆவது அலையில், இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிவதும், உரிய மருத்துவ வசதி, மருத்துவமனையில் படுக்கை, ஆக்சிஜன்வசதி கிடைக்காமல் அல்லல்படுவதுமாக இருந்த சூழலில், கொல்கத்தா இஸ்லாமியா மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு, ஐசியு வசதியுடன் கடந்த மே 30 அன்று மீண்டும்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளது.

இந்நிலையில்தான், இந்தமருத்துவமனையில் இஸ்லாமியர்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப் படுகிறது. மற்ற மதத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது இல்லைஎன்று சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இது சமூகவலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.ஆனால், விசாரணையில், இஸ்லாமிய மதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என கூறி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை; மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி அனைவருக்குமே கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

;