india

img

மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் குழப்பம், முட்டல், மோதல்

48 மக்களவை தொகுதியை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) -  நவநிர்மாண் சேனா மற்றும் சின்னஞ்சிறிய கட்சிகள் உள்ளன. 

மகாராஷ்டிராவில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று  நடைபெறவுள்ள நிலையில், மோதல் போக்கு காரணமாக பாஜக கூட்டணியில் இன்னும்  தொகுதி பங்கீடு முடிவடைய வில்லை. அதாவது மொத்த முள்ள 48 தொகுதியில் பாஜக 26 முதல் 28 தொகுதியிலும், சிவசேனா (ஷிண்டே) 12 முதல்  14 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 5  தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக மட்டுமே அடிக்கடி  தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் உறுதியான  தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்னும் கையழுத்தாகவில்லை.

இந்நிலையில், தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் மோதல்  தலைதூக்கியுள்ளது. பாரமதி மக்களவைத் தொகுதி  தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சரும், சிவசேனா (ஷிண்டே) கட்சியின் மூத்த தலைவருமான விஜய் ஷிவ்தாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலை யில், பாரமதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக  2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த விவகாரம் பாஜக கூட்டணிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

;