india

img

முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியை தூண்டிய பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடுக!

புதுதில்லி, ஏப்.23- ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாடா வில் மதவெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 152பி, 298, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் மோடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை. மந்திர்மார்க் காவல் நிலையத்தில் அளித்த புகாரை ஏற்க அங்கிருந்த அதிகாரிகள் தயாராக இல்லாததால், தில்லி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. தில்லி காவல் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்பது கவனிக்கத் தக்கது.

ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணி யில் வேண்டுமென்றே முஸ்லிம் களுக்கு எதிரான கருத்துக்களை தெரி வித்த பிரதமர், இந்து சமூகத்தின் சொத்துக்கள், குறிப்பாக தங்கம் மற்றும்  பெண்களின் தாலிக்கு ஆபத்து இருப்ப தாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றார். 

வெறுப்புப் பேச்சு மூலம் வாக்கு கோருவது மிகவும் சட்டவிரோத மானது. இந்திய முஸ்லிம்களை ஊடுரு வல்காரர்களாகவும், கொள்ளையர் களாகவும், இந்துக்களுக்கு குறிப்பாக இந்து பெண்களுக்கு அச்சுறுத்தலாக வும் சித்தரிப்பது பாஜகவின் வழக்க மாக உள்ளது. இந்த அணுகுமுறை யை உச்சநீதிமன்றம் ஏற்கனவே விமர்சித்துள்ளது.

இந்தியாவின் வளங்களில் முஸ் லீம்களுக்கும் முன்னுரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதைக் குறிப்பிட்ட மோடி, ‘ஊடுருவும் நபர்களுக்கு சொத்துக் களை தரப்போகிறார்கள் என்றார். வேண்டுமென்றே பேசப்பட்ட இந்தக் குறிப்பு அரசியலமைப்புக்கு முர ணானது. அவரது பேச்சில் முஸ்லிம் என்ற வார்த்தை தெளிவாக இடம் பெற்றுள்ளது. பிரதமரின் வார்த்தைகள் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மக்கள் ஒற்றுமைக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று, தமது புகாரில் பிருந்தா காரத் கூறி யுள்ளார்.

சென்னையிலும்  மோடி மீது புகார்
வெறுப்புப் பிரச்சாரம் செய்துவரும் பிரதமர் மோடி மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதக மாக, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில், பொய்யான கருத்துக்களை கூறி பிரதமர் தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்கிறார். எனவே, வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி மீது ஐபிசி பிரிவுகள் 153ஏ, 153பி, 298, 504, 505 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதனன்று (ஏப்.24) ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் வே. ராஜ சேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் சி. திருவேட்டை, எஸ்.கே. முரு கேஷ், இ. சர்வேசன், கே. முருகன், வி.  தனலட்சுமி, வே. ஆறுமுகம், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே. இரவீந்திர பாரதி, மாவட்டக்குழு உறுப் பினர்- கவுன்சிலர் ஆ. பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, தலை வர்கள் ஊர்வலமாக சென்று- மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உச்சநீதிமன்றம் தாமாகவே தலையிட்டு தண்டிக்க வேண்டும்!

“10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர், தன்னுடைய சாதனைகளை கூறி வாக்கு கேட்க வக்கில்லாமல் உள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் வீடு, சொத்து, தங்கம், வெள்ளி ஆகியவற்றை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள். தாய்மார்களின் தாலி யைக் கூட அறுத்து கொடுத்து விடு வார்கள் என்று பேசியுள்ளார்.

இப்படி பேசுவது மோடிக்கு புதிதல்ல. மதவெறியை தூண்டும் குற்றத்தை வழக்கமாக செய்யும் குற்றவாளி மோடி. இத்தகைய கிரிமினல் குற்றங்களை கடந்த காலத்தில் செய்து, அரசியல் அறு வடை செய்துள்ளார். அதன் காரண மாகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டின் ஒற்றுமை பற்றி மோடிக்கு கவலை இல்லை. மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கிற வேலையை செய்கிறார்.

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் படி தண்டிக்கப் பட வேண்டியவர். ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை இல்லை. ஏனெனில், அர சமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் மோடி தன்னுடைய ஏவல் நாய்களாக மாற்றி வைத்துள்ளார்.

எனவே, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து, மோடி  மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட வேண்டும். 

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தில்லியில் காவல்நிலையத்தில் புகார்  செய்துள்ளோம். தேர்தல் ஆணையத் திற்கும் கடிதம் எழுதியுள்ளோம். 

நாடு முழுவதும் பல இடங்களில் மோடி மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா ஒற்றுமையாக இருக்க மோடி ஆளக் கூடாது, பேசக் கூடாது”

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் க. கனகராஜ் கூறியதிலிருந்து...

;