india

img

தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சூழ்ச்சி

ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால் மதுபான கலால்  கொள்கை வழக்குத் தொடர் பாக மார்ச் 21 அன்று அமலாக்  கத்துறையால் கைது செய்யய் யட்டார். கெஜ்ரிவாலின் அம லாக்கத்துறை காவல் வியா ழனன்று முடிவடைந்த நிலை யில், அன்றைய தினமே தில்லி ரோஸ்அவென்யு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரி வாலின் விசாரணை காவலை  மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்  டும் என அமலாக்கத்துறை கோரி க்கை விதித்தது. இதற்கு கெஜ்ரி வால், “வழக்கு விசாரணையின்  பொழுது நாங்கள் விரும்பும் வரை  அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம்” என கூறினார். அமலாக்கத்துறையின் காவல் நீட்டிப்புக்கு கெஜ்ரிவால் எதி ர்ப்பு தெரிவிக்காத நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீடித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
நீதிமன்றத்தில் ஆஜராகும் பொழுது செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறுகையில், “தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப் பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் தில்லி  மக்கள் தக்க பாடம் புகட்டுவார் கள். என்றும் அவர் கூறினார். மேலும், மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க  வேண்டுமென்றே செயல்பட் டுள்ளது அமலாக்கத்துறை. எனது கைது அரசியல் சதி ஆகும். காழ்ப்புணர்ச்சி காரண மாகவே நான் கைது செய்யப் பட்டுள்ளேன்” எனக் கூறினார். 

மனு தள்ளுபடி
அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து  நீக்கக் கோரி சுர்ஜித் சிங் என்ப வர் தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்  கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் வியாழனன்று விசா ரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், “தில்லி நிர்வாக பிரச்  சனை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் குடிய ரசுத் தலைவர் ஆட்சியை அமல்  படுத்தும்படியும், முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொட ரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது” எனக் கூறி  மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆட்சியை கலைக்க பாஜக குதிரை பேரம்

புதனன்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் தங்களுக்கு பாஜகவிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாகவும்,  பாஜகவில் சேர்ந்தால் பணம், ஒய் பிரிவு பாதுகாப்பு, மக்களவை தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு அளிப்பதாக கூறி தொடர்ந்து அழைப்பு வருவதாக குற்றம் சாட்டினர். இதனை  சுட்டிக்காட்டி தில்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சவுரப் பரத்வாஜ் வியா ழனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,”தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக  “ஆபரேஷன் லோட்டஸ்” திட்டத்தை துவங்கியுள்ளது. அதாவது குதிரை பேரம் மூலம்  இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஆட்சியை அகற்ற பாஜக தீவிரமாக களமிறங்கி யுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மியை உடைக்கவும் பாஜக சதி?

தில்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் உள்ளது. இரு மாநி லங்களிலும் பாஜகவை விட 3 மடங்கு அதிகமான அளவில் ஆம் ஆத்மி  எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவிற்கு உதிரி எண்ணிக்கையில் எம்எல்ஏக்  களே உள்ள நிலையில், தில்லி, பஞ்சாப்பில் பாஜக குதிரை பேரம் நடத்துவது  சற்று சிரமமான விஷயம்தான். ஆனால் மகாராஷ்டிரா போல கட்சியை  உடைத்து குழப்பத்தை ஏற்படுத்தவும் பாஜக களமிறங்கியுள்ளது. இதன்  முதல்படியாக பஞ்சாப் மாநிலத்தின் ஒரே ஒரு  ஆம் ஆத்மி எம்பி சுஷில் குமார்  ரிங்குவை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இவர் மூலம் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை உடைக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
 

 

;