india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நடப்பாண்டில் கோடை வெயில் அதிகமாக இருக்  கும் என்பதால் வழக்கத்தை விட அதிக வெப்ப மான கோடைக்கு தயாராகுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலை வர் அமித் பலேகர் பணமோசடி வழக்கில் அம லாக்கத்துறை முன்பு வியாழனன்று ஆஜரானார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி  14 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் கூறி னார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறான கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் மீது துர்காபூர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

அந்நிய செலாவணி மீறல் வழக்கில் திரிணா முல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தானி வியாழனன்று ஆஜராகும்படி அமலாக்கத்  துறை உத்தரவிட்டு மூன்றாவது முறையாக சம்மன்  அனுப்பி இருந்தது. இந்த சம்மனை மஹுவா மொய்த்ரா புறக்கணித்தார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான  நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு  உயிரிழந்தார். 

உத்தரகண்ட் மாநிலத்தில் நானகமட்டா குருத்  வாரா கர சேவை தலைவர் பாபா தர்செம் சிங்  அடையாளம் தெரியாத நபர்களால் வியாழனன்று  சுட்டுக் கொல்லப்பட்டார்.

2023-2024 நிதியாண்டில் போலி ஆவ ணங்கள் மூலம் ரூ.19,690 கோடி அள வுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஹரியானா முன்னாள் அமைச்சர் சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

எதிர்க்கட்சி இல்லாத இந்தியாவை உரு வாக்குவதே பாஜகவின் ஒரே நோக்கம் என  தில்லி அமைச்சர் கோபால் ராய் குற்றம் சாட்டி யுள்ளார்.

லக்னோ
பாஜக ஆளும் உ.பி.,யில் 6 வயது சிறுமி பலாத்காரம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத் தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதனன்று 6 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்  பட்ட சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. பரா பங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, குடி போதையில் இருந்த பக்கத்து வீட்டில்  வசிக்கும் ஆனந்த் என்பவர் பாலியல்  பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோரின்  புகாரின் அடிப்படையில் போலீசார் விசா ரணை மட்டுமே மேற்கொண்டு வருவதாக  தகவல் வெளியாகியது. ஆனால், பாலி யல் குற்றவாளியான ஆனந்த் கைது செய்  யப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜார்க்கண்டிலும்...
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்  டத்தில் 16 வயது சிறுமியை  3 பேர் கொண்ட  கும்பல், பாலியல் வன்கொடுமை செய் யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. சிறுமி யின் தாயார் அளித்த புகாரின் பேரில்  ஜார்க்கண்ட் அரசு சிறப்பு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை அதிவிரை வாக கைது செய்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

பெங்களூரு
ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு சிக்கல் 
லிங்காயத் துறவிகள் எதிர்ப்பால்
பாஜகவுக்கு நெருக்கடி

கர்நாடகா மாநிலம் தார்வாட் மக்க ளவைத் தொகுதியில் கடந்த 2009 முதல் எம்பியாக இருக்கிறார் தற்  போதைய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. இத்தொகு தியில் லிங்காயத்துகள் பெரும்பான்மை யாக உள்ள நிலையில், பிராமண சமூ கத்தை சேர்ந்தவரான பிரகலாத் ஜோஷிக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு  வழங்கியுள்ளது சரியானது அல்ல என்  றும், அவருக்கு எதிராக லிங்காயத் துறவி கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து லிங்காயத் துறவிகள் கூட்டாக அளித்த பேட்டியில், “மார்ச் 31 வரை காத்தி ருப்போம். அதற்குள் தார்வாட் தொகுதி யின் பாஜக வேட்பாளர் பிரகலாத் ஜோஷி யை மாற்ற வேண்டும். இல்லையென் றால் ஏப்ரல் 2 அன்று தங்களது முடிவை  அறிவிப்போம்” என கூறியுள்ளனர். லிங்  காயத் சமூகத்தின் வாக்குகளை நம்பியே கர்நாடகாவில் பாஜக ஒவ்வொரு தேர்த லையும் எதிர்கொண்டு வருகிறது. இந்  நிலையில், வேட்பாளரை மாற்றக் கோரும் லிங்காயத் துறவிகளின் அழுத்  தம் காரணமாக பாஜகவின் மாநில மற்றும்  தேசிய தலைமை கலக்கத்தில் ஆழ்ந்துள்  ளது.

இடாநகர்அருணாச்சலில் எதிர்க்கட்சிகளை மிரட்டும் பாஜகமுதல்வர் உட்பட 4 பேர்போட்டியின்றி தேர்வு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்  றான அருணாச்சலப்பிரதேசத் தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பேமா காண்டு உள்ள நிலையில், அருணாச்சலில் மக்க ளவை தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும்  நடக்க உள்ளது. 2 மக்களவை மற்றும்  60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19  அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடை பெறுகிறது. புதனன்று வேட்புமனுத்தாக் கல் நிறைவு பெற்றது. 

இந்நிலையில், தாலி, தாலிஹா, சாகலி, ரோயிங் ஆகிய தொகுதியில் காங்கிரஸ் உட்பட பிற எதிர்க்கட்சி வேட்பாளர்கள்  தங்களது வேட்பு மனுவை திடீரென வாபஸ் பெற்றனர். இதனால் பாஜக  முதல்வர் பேமா காண்டு உட்பட 4 பாஜக  வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்  வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்  ளது. தங்கள் வேட்பாளர்களை தவிர  வேறு யாரும் தேர்தலில் களம் காணக்  கூடாது என பாஜக மிரட்டியதன் காரண மாகவே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடாமல் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

;