india

img

ஸ்டான் சுவாமிக்கு புகழாரம் சூட்டிய மும்பை நீதிபதி ஷிண்டே... நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை ஆட்சேபணை.... .

மும்பை:
மோடி அரசின் தேசிய பாதுகாப்பு முகமையால் (NIA), ‘எல்கர் பரிஷத்’ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலேயே இறந்து போனவர் 84 வயதுபாதிரியார் ஸ்டான் சுவாமி. அவரது மரணம் ஐக்கிய நாடுகள் அவை துவங்கி,உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்தியாவிலும் அவரதுமரணம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அண்மையில் எல்கர்பரிஷத் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதிரியார் ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஷிண்டே தனது வருத்தத்தை தெரிவித்தார். “ஸ்டான் சுவாமியின் இறுதி நிகழ்ச்சியை இணையத்தில் நேரடியாகப் பார்த் தோம். அவர் ஒரு உன்னதமான மனிதர். பழங்குடி மக்களுக்கு சிறந்த சேவையாற்றியவர். நீதிமன்ற தடுப்புக் காவலில் மறைந்த ஸ்டான் சுவாமியின் பணிகளுக்கு நாங்கள் (நீதிபதிகள்) மரியாதை செலுத்துகிறோம். அவரது மரணத்தால் பேசமுடியாமல் தவிக்கிறோம். ஸ்டான் சுவாமி மனு மீது ஏன்,எங்களால் தீர்ப்பு கூற முடியாமல் போனது? என்பதுதான் எங்களுக்குள் எழும் கேள்வியாக உள்ளது” என்றுகுறிப்பிட்டிருந்தார். என்ஐஏ-வின் பிடிவாதத்தால்தான் ஸ்டான் சுவாமியின் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது என்பதையே மறைமுகமாக ஷிண்டே பதிவு செய்திருந்தார். இதனால் அதிர்ந்துபோன தேசியபுலனாய்வு முகமை, நீதிபதி ஷிண்டேவின் கருத்துக்கு ஆட்சேபணை தெரிவித்து மனு ஒன்றை தாக்கல் செய்தது.ஸ்டான் சுவாமி பற்றிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியது. 

இதனை பிரச்சனையாக்க விரும்பாத நீதிபதி ஷிண்டே-வும் தற்போது ஸ்டான் சுவாமி பற்றிய தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். என்ஐஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில்சிங்-கிடம் பேசிய நீதிபதி ஷிண்டே, “என்ஐஏவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில்உள்ள சட்ட ரீதியான அம்சங்களைத் தான் தெரிவித்தேன். ஒருவேளை எங்கள் கருத்துகள் உங்களை காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். என்னுடைய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன். பொதுவாக நாங்கள் கருத்துக்கள் தெரிவிப்பது இல்லை. இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தான்.. சில நேரங்களில் இப்படி நிகழ்ந்து விடுகிறது” என்று பின்வாங்கியுள்ளார்.

;