science

img

எல்1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்!

ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மாலை எல்1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்’ புள்ளி-1 சென்றடைந்து, அங்கிருந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை (ஜனவரி 6-ஆம் தேதி) மாலை அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
 

;