states

img

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 - 2024

இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யபட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு
10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு 
 அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
வேளாண் இயந்திரங்களுக்கு ரூ.125 கோடி
பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.
உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்
பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ. 22 கோடி ஒதுக்கீடு
நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு
தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை; தக்காளிக்கு ₹19 கோடியும், வெங்காயத்துக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ₹11 கோடி ஒதுக்கீடு
“சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருதும், ₹5 லட்சம் பரிசும் வழங்கப்படும்
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
ரூ.2,337 கோடி பயிர்காப்பீட்டு மானியம்
பருத்தி உற்பத்திக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
தென்னைமர வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி உதவி
சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 இலட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது
 

;