tamilnadu

img

புகையிலை பயன்பாட்டை விட முறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பே அதிகம் - ஆய்வில் தகவல்

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பை விட மக்களின் முறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பே அதிகமாக உள்ளது என ஆய்வு ஒன்றின் தகவலில் தெரியவந்துள்ளது.


உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் Lancet என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முறையற்ற உணவுப்பழக்கத்தால் கடந்த 2017ல் மட்டும் சுமார் ஒருகோடியே 9 லட்சம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார். இது மொத்த உயிரிழப்பில் 22 சதவிகிதமாகும். அதே சமயத்தில் புகையிலை பயன்பாட்டால் 80 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் பெரும்பாலும் இதயதசைகள் தொடர்பான பிரச்சனைகள் அதைத்தொடர்ந்து புற்றுநோய் மற்றும் நீரிழிவுநோய் தொடர்பான பிரச்சனைகளால் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். உணவுப்பழக்கத்தில் முழு தானியங்களின் பயன்பாடு குறைவாக இருப்பதும், பழங்களை உண்பது குறைவாக இருப்பதும் மற்றும் சோடியம் உப்பின் அளவு அதிகளவில் இருப்பதுமே இவ்வகை உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


;