tamilnadu

img

குறைந்தபட்ச ஊதியத்தை மறுபரிசீலனை செய்ய குழுவா?

சென்னை, ஆக. 31- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாநில சம்மேளனக் கூட்டம் சென்னையில் வெள்ளியன்று (ஆக.30) தலைவர் நா.பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்தில் பொதுச்செயலாளர்  கே.ஆர்.கணேசன், கவுரவத்தலைவர் பா. சண்முகம், செயலாளர் பி.ஸ்ரீனி வாசுலு  மற்றும் நிர்வாகிகள் சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் உள்ள உள் ளாட்சி ஊழியர்களுக்கு 1977-ம் ஆண்டுக்குப் பின் குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்படவில்லை. சிஐடியு சம்மேளன தொடர் போராட்டம் காரணமாக குறைந்த பட்ச ஊதிய குழு 2014ம் ஆண்டு அமைக்கப்பட்டு 11.10.17ல் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்  செய்யப்பட்டது. இதற்கான அர சாணைப்படி ஊதியம் வழங்க  வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர், திருச்சி மாநகராட்சிகள்,  புதுக்கோட்டை, காஞ்சிபுரம் நக ராட்சி ஆணையர்கள் அமலாக்கி உள்ளனர். இந்நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை மறுபரிசீலனை செய்ய மீண்டும் குழு அமைக்கப்  பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த  நடவடிக்கையைக் கண்டிப்பது டன் குறைந்தபட்ச ஊதிய மறு பரிசீலனை கைவிடப்பட வேண்டும்.

ஊதிய முரண்பாடு

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி தூய்மை பணியில் உள்ள ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.379 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் ரூ.560, திருச்சி ரூ.500 ஊதியம் தரப்படுகிறது.இந்த ஊதிய முரண்பாட்டைக் கண்டித்து வலுவான போராட் டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாததால் பல மாதம் சம்பளப்  பாக்கி உள்ளது. எனவே மத்திய  அரசு தமிழக உள்ளாட்சிகளுக்குத் தர வேண்டிய ரூ.6000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒதுக்கிய நிதியை உள்ளாட்சி களுக்குத் தருவதுடன் சம்பளப்  பாக்கி  மற்றும் 7வது ஊதியக்குழு  சம்பளத்தை அமலாக்க வேண்டும்.

ஜனநாயக விரோதம்
சென்னை மாநகராட்சி யில் தொழிலாளர் கோரிக்கை களுக்காக மாநகராட்சி அலுவல கத்திற்குள் வாயிற் கூட்டம் நடத்தவோ, கோரிக்கை ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத் தவோ மாநகராட்சி ஆணையர் விதித்துள்ள தடை உத்தரவு ஜனநாயக விரோதமானதாகும். தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது கண்டனத்திற்கு உரி யது ஆகும்.இதை அவர் மறு பரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

;