tamilnadu

வண்டலூர் - மீஞ்சூர் இடையே மின் விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கும் சாலை

காஞ்சிபுரம், மே 9- வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலைப் பணிகள் கடந்த 2010ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. 80 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. ஆனாலும்கூட வண்டலூரில் இருந்து பூந்தமல்லி,மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு, பெரும்பாலான மக்கள் இந்த சாலையையேபயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை நகரத்திற்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மேலும் குறித்த நேரத்தில் குறித்த இடங்களுக்கு விரைவாக, எளிதாக செல்ல முடிவதால், வாகன ஓட்டிகளும், தினமும்வேலைக்கு, வியாபாரத்திற்கு செல்பவர்களும் அதிகமாக இந்த சாலையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்த வெளிவட்டச் சாலையில் குன்றத்தூர், மாங்காடு போன்ற நகர்ப்புறங்களை ஒட்டியுள்ளபகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் சாலையின் பெரும்பாலான இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குறைந்தபட்சம் நகர்ப்புற பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களிலாவது போதுமான மின் விளக்குகள் அமைத்து, விபத்து மற்றும் வழிப்பறிஉள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதுடன், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;