tamilnadu

img

செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்காமல் இழப்பு விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம், பிப். 22- அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள செண்டுமல்லி பூவிற்கு போதிய விலை கிடைக்காததால் மலர் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளான சிறுமுகை, கார மடை பகுதிகளில் வாழைக்கு அடுத்த படியாக மலர் செடிகள் பயிர் செய் யப்பட்டு வருகிறது. இதில் பெருமளவு செண்டுமல்லி பூக்கள் விளைவிக்கப் பட்டு வரும் நிலையில், இப்பூவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசா யிகள் இழப்பை சந்தித்து வருகின்ற னர். செண்டுமல்லி பயிர் செய்து நாற் பத்தைந்து நாட்களில் மலர்கள் அறு வடைக்கு தயார் ஆகும். நன்கு பூத்த மலர்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை என ஆறு முறை தொடர்ந்து அறுவடை செய்ய இயலும்.  ஒரு ஏக்கருக்கு சுமார் ரூபாய் முப்பதாயிரம் வரை செலவு பிடிக்கும். ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் ஒரு கிலோ செண்டு மல்லி ரூபாய் முப்பது முதல் நாற்பது வரை கூட விலை கிடைக்கும். பிற நாட்களில் ரூபாய் பதினைந்து முதல் இருபது வரை விலை குறைந்து விடும். ஆனால் தற்போது இதன் விலை மேலும் சரிந்து ஒரு கிலோ  செண்டுமல்லிக்கு பத்து ரூபாய் மட் டுமே கிடைத்து வருவதால் விவசா யிகள் கவலையடைந்துள்ளனர். மலர் சந்தை தவிர ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யும் சென்ட் தயா ரிப்பு ஆலைகள் கிலோ ஏழு ரூபாயிற்கு மட்டுமே வாங்குவதால் இப்பகுதி மலர் விவசாயிகளுக்கு இவ்வாண்டு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

;