tamilnadu

ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இழப்பு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமதுஅலி பேட்டி

பெரம்பலூர், ஆக.5- ஆவின் நிர்வாகம் பால், பால் மதிப்புக் கூட்டியப் பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வா கம் திட்டமிட வேண்டும் என  தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாநில தலை வர் கே.முகமது அலி தெரி வித்துள்ளார். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே யுள்ள தனியார் கூட்டரங்கில், திருச்சி ஒன்றிய ஆவின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் செவ்வா ய்க்கிழமை நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: திருச்சி, பெரம்பலூர், அரி யலூர், கரூர் ஆகிய மாவ ட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஒன்றிய ஆவின்  நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெரும்பா லான கூட்டுறவு பால் உற்ப த்தியாளர்கள் சங்கங்க ளில், விவசாயிகள் கொண்டு வரும் பால் முழுவதையும் ஆவின் நிர்வாகம் கொள்மு தல் செய்வதில்லை.

அவ்வ ப்போது பாலை கொள்மு தல் செய்யாமல் சங்கங்க ளுக்கு விடுமுறை அளிக்கி ன்றனர். ஆனால் மாடுக ளுக்கு பாலை கறக்காமல் விடுமுறை அளிக்க முடி யாது. அப்படி விடுமுறை அளித்தால் மாடுகளுக்கு மடி நோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் பசும்பாலுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த விலை லிட்டருக்கு ரூ.32 வழங்காமல், பல்வேறு காரணங்களை கூறி லிட்டர் ரூ.29.50 விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். பால் கொள்முதல் தொகை யை உடனடியாக வழங்கு வதில்லை. ஆவின் நிர்வா கத்தின் அலட்சியத்தால் இழப்பு ஏற்படுகிறது.  இதுகுறித்து, பேச்சு வார்த்தையில் பங்கேற்ற ஆவின் உயரதிகாரிகள் மற்றும் ஆவின் தலைவரிடம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் எடுத்து ரைக்கப்பட்டது.

இனி இது போன்ற தவறு நிகழாமல்  விவசாயிகள் கொண்டுவ ரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வதாக வும், உரிய விலையை உடனு க்குடன் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.  இதனால், ஆவின் நிர்வா கத்தை கண்டித்து அரிய லூர் மாவட்டத்தில் பால்  உற்பத்தியாளர்கள் சார்பில்  ஆக.5 அன்று நடத்தப்படு வதாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. திருச்சி ஒன்றியம் மூலம் நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் மற்றும் பால் மதிப்புக் கூட்டிய பொருள்களின் விற்ப னையை அதிகரிக்க ஆவின்  நிர்வாகம் திட்டமிட வேண்டும். இதன் மூலம் இழ ப்பை தவிர்த்து நிறுவ னத்தை லாபகரமாக கொண்டு செல்ல முடியும் என கூறினார். பேட்டியின் போது, மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலர் மணி வேல், பால் உற்பத்தியா ளர்கள் சங்க மாவட்டச் செய லர் என்.செல்லதுரை மற்றும்  சிபிஎம் நிர்வாகிகள்  உடனி ருந்தனர். 

;