tamilnadu

img

6 மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை: முதல்வர்...

சென்னை:
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய ஆறு மாவட்டங்களில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் பெருகி வந்த கொரோனா பெருந்தொற்று கட்டுக் கடங்காமல் போனது. இதையது ஊரடங்கில் தளர்வுகள் ரத்து செய்யப் பட்டது.இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த ஒரு வாரத்திற்கு எந்தத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை செய்தபோது, முதலில் ஒருவார காலம் ஊரடங்கைப் போடுவோம்.தேவைப்பட்டால் இரண்டாவது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.இப்போதுள்ள நிலை ஓரளவுக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் முழு திருப்தி வரவில்லை. வந்த பிறகு அதை குறித்து யோசித்து முடிவு எடுப்போம்”எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், காவல்துறைத் தலைவர் திரிபாதி உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.இந்தக்கூட்டத்தில் ஊரடங்கின் நிலை, மாவட்டங்களில் ஊரடங்கு அமலவாது, சட்டம் ஒழுங்கு, நோய்த் தொற்றுப்பரவல், தடுப்பூசி, ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொற்று அதிகமுள்ள 6 மாவட்டங்கள்
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,”கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது” என்றார்.மாவட்ட வாரியாக இத்தொற்றின் தாக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட் டங்களில் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப் படுகிறது.‌ எனவே, இந்த மாவட்டங்களில் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இந்த ஆறு மாவட்டங்களைப் பொறுத்தவரையில், அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் நல்ல மருத்துவக் கட்டமைப்பை கொண் டுள்ள மாவட்டங்களாகும். இந்தக் கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப் பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப் படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என் பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
 

;