tamilnadu

மேகதாது விவகாரம்... முதல்வர்-கட்சித் தலைவர்கள் கருத்து....

சென்னை:
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு சட்டப்பேரவை அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“தமிழ் நாட்டிற்கு காவிரி வாழ்வுரிமை என்பதால், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் காவிரி முழு உரிமை கொண்டது. கர்நாடகத்தை விட தமிழகத்தில்தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார் என்பதாலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வழக்கமான காலத்திலேயே காவிரியில் நமக்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தருவதில்லை. மேகதாது அணையை கட்டிவிட்டால் எப்படி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்திலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் டி.ஜெயகுமார், மனோஜ்பாண்டியன்(அதிமுக), கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந் தகை(காங்கிரஸ்), கே. பாலகிருஷ் ணன், பி. சண்முகம் (சிபிஎம்), இரா.முத்தரசன்(சிபிஐ), தொல்.திருமாவளன், ரவிக்குமார்(விசிக), பூமிநாதன், சின்னப்பா(மதிமுக), ஜி.கே. மணி, வெங்கடேசன் எம்எல்ஏ (பாமக), நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி(பாஜக), கொங்கு ஈஸ்வரன், டி. வேல் முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட் டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சித் தலைவர்கள் பேட்டி கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு:-

கே.எஸ். அழகிரி: காவிரி கர்நாடத் திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்பதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பாஜக அரசு எடுத்து வரும் நடவடிக்கை தர்மத்திற்கும், சட்டத்திற் கும் புறம்பானது என்பதால் தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம்.இரா.முத்தரசன்: மேகதாது உள் ளிட்ட எந்த ஒரு பிரச்சனையையும் கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது. அது தமிழ்நாட்டிற்கு இழப்பாக அமைந்ததுதான் கடந்த கால அனுபவம் ஆகும். நாம், நமது உரிமைகளை இழந்து விடாமல் பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மிகுந்த விழிப்புடனும், எச்சரிக் கையுடன் முன்னெடுக்க வேண்டும்.

இது வெறும் தண்ணீர் பிரச்சனை மாத்திரமல்ல. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை தொடர்புடைய பிரச்சனையாகும். அரசு மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கும் என்பதுடன் கர்நாடக மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாட்டின் கோரிக் கைகளில் உள்ள நியாயத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, சட்ட வரம்புக்குள் நின்று ஜனநாயக வழிமுறையில் தனித்தும் ஒத்தக் கருத்துள் ளவர்களை அணிதிரட்டியும் கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

டி.ஜெயகுமார்: மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இதை, எங்கள் ஆட்சிக் காலத்திலும் தெளிவாக கூறியிருக்கிறோம். இப் போதும் அதே நிலையில்தான் இருக்கிறோம். கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக்கட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எங்களது ஆதரவு உண்டு.

தொல். திருமாவளவன்: மேகதாது குறித்த வழக்கு நிலுவையில் இருக் கும்போதே அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி அணைக்கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் கூறுவதும் நமது அரசியல் சாசனம் வகுத்து கொடுத்திருக்கும் சட்டத்திற்கும் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது என்பதால் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.

ஜி.கே.மணி: தமிழக அரசின் தலைமையில் ஒட்டுமொத்த மக்களின் சார் பில் அனைத்து கட்சியும் மிக சரியான நேரத்தில் ஒன்று திரண்டு குரல் கொடுப் பது வரவேற்க்க தக்கதாகும். மேகதாது குறித்து தமிழ்நாட்டின் தரப்பில் இதுவரைக்கும் வந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் முதன்மை வழக்காக இல்லை. எனவே, உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும். அணை கட்டும் பிரச்சனையில் ஒன்றிய அரசு சரியான அணுகுமுறையாக கையாளவேண்டும்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல் முருகன்: மிக சரியான நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தியிருக்கிறார். இந்த கூட்டத்தின் மூலம் இந்திய அரசின் ஒன்றிய பிரதமர் மற்றும் அமைச் சரை நேரில் சந்தித்தும் நமது கோரிக் கையின் நியாயத்தை விளக்கமாக கூறி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். வாட்டள் நாகராஜ் போன்ற இன வெறியர்களால் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர் கள் தாக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன்: முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியுமா? என்ற தடுமாற்றத்தில் இருந்து வரும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, அந்த பிரச்சனையை திசைதிருப்ப மேகதாது அணையை கையில் எடுத்திருக்கிறார். அவருக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்று பட்டு நிற்கிறது என் பதை இந்த கூட்டத்தின் மூலம் கர் நாடக அரசுக்கு நிரூபித்திருக்கிறோம்.

ஜவாஹிருல்லா: மேகதாதுவில் அணைக் கட்டினால் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வும் பறிப் போகும் விளை நிலங்களும் வறண்டுபோகும் என்பதால் கர்நாடாக அரசு அணைக் கட்ட அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்கக்கூடியதாகும்.இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின்கோரிக்கையைக் கேட்க வாய்ப்பே அளிக்காமல் தில்லி தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி, ஒருதலைபட்சமாகத் தீர்ப்பு அளித்தது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, முதல்வர் தலைமையில் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து, மேகே தாட்டு அணை திட்டத் திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில், தமிழக அரசு மேற்கொள் கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப் போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;