tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிர்மலாதேவி வழக்கு தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு
விருதுநகர், ஏப்.26- கல்லூரி மாணவி களை தவறாக வழி நடத்த முயன்றதாக கடந்த 2018-ஆம்  ஆண்டு தனியார் கல் லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்  பட்ட 3 பேரில் ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமி மற்றும் பேராசிரியர் முருகன் ஆகிய  இருவர் மட்டுமே மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிர்மலா தேவி நீதி மன்றத்திற்கு வரும் வழியில் உடல்நிலை  சரியில்லை; எனவே, நீதிமன்றத்தில் ஆஜ ராக முடியவில்லை என்று தனது வழக்க றிஞரின் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பை நீதிபதி பகவதி அம்மாள் ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளார். கண்டிப்பாக அன் றைய நாளில் ஆஜராக வேண்டும் என வும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு!
தமிழக டிஜிபி நடவடிக்கை

சென்னை, ஏப். 26 - சேலம் மாவட் டம், ஆத்தூர் பகுதி யை சேர்ந்தவர், ‘அமிர்தா சேகோ’ தொழிற்சாலை நிறு வனர் குழந்தை வேலு. அவரது மகன்  சந்தோஷ். இவர் சொத்துக்காக தந்தை குழந்தை வேலு வை அடித்து உதைத்து கொடுமைப்  படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்க ளில் வைரலானது. தாக்குதலுக்குள் ளான குழந்தைவேலு ஏப்ரல் 21 அன்று இறந்து விட்டார். ஆனால், காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. இத னால், காவல்துறையினர் ஒரு தலைப் பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது. இந்தச் செய்தி டிஜிபியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதை யடுத்து, அவரது உத்தரவின் பேரில் தற்  போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது.

குழந்தைகளுக்கு தண்டனை கூடாது!
உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.26- தமிழகப் பள்ளிகளில், தேசிய குழந்  தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய  விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்  றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை (ஏப்.26) அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், “பள்ளி குழந்  தைகளை அடிப்பது போன்ற தண்டனை யை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை  அமல்படுத்த வேண்டும்” என தமிழக பள்  ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டது.

மேலும் ஆணைய விதிகளை அனைத்து  பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதி காரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்;  விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்  டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்  கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்; விதிகள் அமல்படுத்தப்பட்டதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘ஆடியோ’ அண்ணாமலைக்கு முன்பே தெரியாததா?
செல்லூர் ராஜூ சூடு

மதுரை, ஏப்.26- போனில் ரகசிய மாக பேசியதை டேப்  செய்து வெளியிடும் பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலைக்கு, வாக்காளர் பட்டிய லில் பெயர்கள் நீக்கப்  பட்டது தெரியாமல் போயிருக்குமா? என்று அதிமுக முன் னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி  எழுப்பியுள்ளார்.

“தேர்தல் ஆணையம் மூன்று, நான்கு முறை வாக்காளர்பட்டியல் கொடுத்தது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட  திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கொடுத்தது. அப்போதெல்லாம் எதுவும்  கூறாத அண்ணாமலை, இதை தேர்தல்  நாளன்று வாக்காளர் நீக்கம் என்று கூற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு  கட்சிக்கு மாநிலத் தலைவராக இருப்ப வர், மாநிலம் முழுவதும் எவ்வளவு வாக் காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பேசியிருந்தால் பரவாயில்லை. அதென்ன தான் போட்டியிடும் கோயம் புத்தூர் தொகுதியைப் பற்றி மட்டும் பேசு கிறார்? அவருக்கு தோல்வி பயம் வந்து  விட்டது. அதைத்தான் மறைமுகமாக இப்  படி கூறியிருக்கிறார்” என்றும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

பேரவைத் தலைவர் உத்தரவை 
எதிர்த்து வழக்கு தொடர முடியுமா?

சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஏப்.26- “கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் முதல மைச்சராக இருந்த கருணாநிதி, அன்றைய  மேயரும் தற்போதைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்  முடி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு  செய்யப்பட்டது.

பின்னர், பேரவைத் தலை வர் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வழக்கு கைவிடப்பட்டது.  இந்நிலையில், வழக்கு தொடர்வதற் கான அனுமதியை திரும்பப் பெற்று பேர வைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசா ரிக்க உத்தரவிட வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவையை சேர்ந்த  மாணிக்கம் என்பவர் தாக்கல் மனு தாக்கல்  செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராய ணன் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர் வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்  தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி கள், பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்த ரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? அதுவும், 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? என்பது குறித்து தீர்ப்பு களை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கு மாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தேர்தலில் ரூ.40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள்

கட்சியினரே போஸ்டர் ஒட்டிய சம்பவம்
மதுரை, ஏப்.26-  விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி யிட்டார். இந்நிலையில், இந்த தொகுதிக்கு  உட்பட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி யில் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக் கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாகக் கூறி திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பாஜக நாடாளுமன்றப் பொறுப்  பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்  டத் தலைவர் சசிகுமார், செயலாளர் சின்னச்சாமி, மதுரை மேற்கு மாவட்ட செயற்  குழு உறுப்பினர் சின்ன.இருளப்பன் ஆகிய  நான்குபேர்  மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டி ருந்தது

;